டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல்!

டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டின் வயது வந்த மக்களின் உயிரியல் தரவுகளை இந்திய நிறுவனமொன்றிற்கு வழங்கி, டிஜிட்டல் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான வசந்த முதலிகேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
மக்களின் தனிப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க உயிரியல் தரவுகளை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கும் பிரஜைகளின் தனிநபர் அந்தரங்க உரிமைக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனச் சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




