திரைக்கு வருவதில் தாமதம்: ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

திரைக்கு வருவதில் தாமதம்: ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நடிகர் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. காதல் மற்றும் ஆக்ஷன் கதைகளக் கொண்ட இத்திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டு, புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "படத்தின் டிரெய்லருக்கும் விளம்பரங்களுக்கும் ரசிகர்கள் அளித்த பெரும் ஆதரவுக்கும், விநியோகஸ்தர்களின் நம்பிக்கைகக்கும் நன்றி.
திரையரங்குகளில் இப்படத்தை மேலும் அதிகமான இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், வெளியீட்டை ஒரு வாரம் தள்ளிவைத்துள்ளோம். அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் உங்களைச் சந்திக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் கூடுதல் திரைக்கதை பணிகளை விக்னேஷ் ராஜா மற்றும் அசோக் செல்வன் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




