சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

"நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்; யாரையும் பழிவாங்க வேண்டாம்" - நாமல் ராஜபக்ஷவுக்கு மஹிந்த கடிதம்!

VIGNESWARAN ABIRAMY•23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்; யாரையும் பழிவாங்க வேண்டாம்" - நாமல் ராஜபக்ஷவுக்கு மஹிந்த கடிதம்!

"நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்; யாரையும் பழிவாங்க வேண்டாம்" - நாமல் ராஜபக்ஷவுக்கு மஹிந்த கடிதம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தனது செயலாளர் மூலமாக, நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஊடாக இந்தக் கடிதம் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், "நீதிமன்றத்தின் மீது மட்டுமே முழுமையான நம்பிக்கை வையுங்கள்; சிறைவாசம் மற்றும் துயரங்களை எதிர்கொள்ளத் தயாராகவே அரசியலில் ஈடுபட வேண்டும்" என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

தான் அரசியலுக்கு வந்த காலகட்டத்தில் எதிர்நோக்கிய சிறைவாசம் குறித்து நினைவுகூர்ந்துள்ள அவர், ராஜபக்ஷக்களின் பாரம்பரியம் பழிவாங்கும் வழிமுறை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தானும் மனைவியும் நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், யோஷித மற்றும் ரோஹித இருவரும் நலம் விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "பழிவாங்காதிருப்பதே ராஜபக்ஷக்களின் வழிமுறையும் பாரம்பரியமுமாகும். மக்கள் நன்றியுணர்வுள்ள சமூகம் என எண்ணிச் செயற்படுங்கள்" எனத் தனது மகனை அவர் ஊக்கப்படுத்தியுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm