சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கனமழையால் கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கனமழையால் கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கனமழையால் கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கிங் கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார எச்சரித்துள்ளார்.

குறிப்பாக தெனியாய, தெல்லவ, தவலம மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக தவலம, ஹினிதும, நாகொட, பத்தேகம மற்றும் திவதுர ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எதிர்வரும் மணித்தியாலங்களில் மேலதிக பலத்த மழைக்கான சாத்தியம் குறைவாக உள்ளபோதிலும், இதுவரை பெய்த மழை காரணமாக இந்த வெள்ள அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm