இசையுலகில் 15 ஆண்டுகளைக் கடந்த ராக்ஸ்டார் அனிருத்! – ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி!

இசையுலகில் 15 ஆண்டுகளைக் கடந்த ராக்ஸ்டார் அனிருத்! – ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழ் திரையுலகின் ராக்ஸ்டார், முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைக் பயணத்தில் வெற்றிகரமாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்தச் சிறப்புமிக்க மைல்கல்லை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!"
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி வெளியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், உலகளவில் பட்டிதொட்டியெங்கும் எட்டிய 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழித் திரையுலகில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.
அனிருத்தின் நெகிழ்ச்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
"பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் எங்களது முதல் பாடல் உலகிற்கு அறிமுகமானது. அன்றிலிருந்து இன்றுவரை இது ஒரு தடையற்ற, தொடர்ச்சியான பயணம். இசை, நினைவுகள், மேஜிக் எனப் பல கடந்து வந்திருக்கிறோம். நாட்டின் மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய ஆசீர்வாதம். நடப்பாண்டில் 'ஜெயிலர் 2', 'ஜனநாயகன்', 'எல்.ஐ.சி' , 'டிசி' மற்றும் 'பாரடைஸ்' போன்ற படங்கள் எனது 15 ஆண்டுப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன. ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் தொடர்ந்து உழைத்து வருகிறோம்; இனியும் அந்த இசை வெறி குறையாது. 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன, துரத்துவதற்கு இன்னும் ஒரு மில்லியன் கனவுகள் காத்திருக்கின்றன. ஸ்டுடியோவிற்குத் திரும்புகிறோம்... சிறந்தவை இனிமேல்தான் வரவிருக்கின்றன, இது வெறும் ஆரம்பம் மட்டுமே!" என பதிவிட்டுள்ளார் .
"திரையுலகில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகளைக் கடந்துள்ள அனிருத், தனது இந்த வெற்றி ரசிகர்களுக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்குத் திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




