
ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!
இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பொதிகளுடன் கடத்தப்பட்ட உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த படகு இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு, அங்குள்ள 10 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இங்கு களத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கைப்பற்றப்பட்ட தொகுதியில் 50 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 100 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் காணப்படுவதாகவும், இதன் சந்தைப் பெறுமதி 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என்றும் தெரிவித்தார்.
நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், 2026-ஆம் ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் மட்டும் 69 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடத்தல்காரர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தப்பிக்க வழியில்லை எனக் எச்சரித்த அவர், போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களை 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




