ரூ. 81 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

ரூ. 81 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் கருத்து தெரிவித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், முறைசாரா நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
குறித்த நிறுவனங்களுக்குப் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்களைப் பெற்றுக்கொடுக்க ஆதரவளித்தமை மற்றும் உதவி செய்தமைக்காக, இலஞ்சமாக 81 இலட்சம் ரூபாயைக் கோரிப் பெற்று, அதைத் தனது சொந்த வங்கிச் கணக்கில் வைப்பு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும், இது தொடர்பில் மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
முன்வைக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் பரிசீலித்த மேலதிக நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடித்து உத்தரவிட்டார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




