சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ரஷியா–உக்ரைன் போர்: மத்தியஸ்தம் செய்ய இந்தியா தயார்!

நிவேதினி•4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ரஷியா–உக்ரைன் போர்: மத்தியஸ்தம் செய்ய இந்தியா தயார்!

ரஷியா–உக்ரைன் போர்: மத்தியஸ்தம் செய்ய இந்தியா தயார்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவவும், தேவைப்பட்டால் மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவவும், தேவைப்பட்டால் மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் (Andrii Sybiha) இணைந்து நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இக்கருத்தைத் தெரிவித்தார். போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்றும், தூதரக வழிப் பேச்சுவார்த்தை மூலமே நிரந்தர அமைதியைக் கொண்டுவர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ரஷியா - உக்ரைன் இடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா எந்த வகையில் உதவ முடிந்தாலும் அதற்கு ஆயத்தமாக உள்ளது. இரு தரப்பும் விரும்பினால் மத்தியஸ்தம் வகிக்கவும் இந்தியா தயாராக இருக்கிறது எனத் தெரிவித்தார். 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm