
தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள்: மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம். குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று (16) நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீது அண்மைக்காலமாகப் பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்து வருவதைச் சுட்டிக்காட்டிய மு.க. ஸ்டாலின், கட்சியின் பெயரை 'பாலியல் சுரண்டல் கழகம்' என மாற்ற வேண்டும் எனக் கூறினார்.
மேலும், பெண்களுக்கு எதிரான இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் விஜய் மௌனம் காத்து வருவதாகவும், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இதுவரை உத்தியோகபூர்வ விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், உரிய முறைப்பாடுகள் அளிக்கப்பட்டால் சட்டம் தனது கடமையைச் செய்யும் என அக்கட்சியின் அமைச்சர்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




