சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ஒடிசாவில் அதிர்ச்சி: நண்பனை நரபலி கொடுத்து தலையை வெட்டிப் பூஜை செய்த கொடூரம்!

ஆகாஷ்•24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஒடிசாவில் அதிர்ச்சி: நண்பனை நரபலி கொடுத்து தலையை வெட்டிப் பூஜை செய்த கொடூரம்!

ஒடிசாவில் அதிர்ச்சி: நண்பனை நரபலி கொடுத்து தலையை வெட்டிப் பூஜை செய்த கொடூரம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம், தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) என்பவர் கடந்த 18ஆம் திகதி முதல் திடீரென காணாமல் போயிருந்தார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், நேற்று உள்ளூர் குளம் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மிதப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம், தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) என்பவர் கடந்த 18ஆம் திகதி முதல் திடீரென காணாமல் போயிருந்தார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், நேற்று உள்ளூர் குளம் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மிதப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.


சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சந்தோஷ் கார்செல்லின் கைபேசி அழைப்புகள் மற்றும் கிராமவாசிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது நண்பர் மீதே சந்தேகம் வலுத்தது.


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நண்பனின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், கொடூர உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. குளத்தில் உடலை வீசிய குற்றவாளி, சந்தோஷின் தலையை மட்டும் தனியாகத் துண்டித்துத் தனது வீட்டில் வைத்து நரபலி பூஜை நடத்தியுள்ளது தெரியவந்தது.


புதையல் எடுக்கும் ஆசையிலும், குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தராக மாற வேண்டும் என்ற மூடநம்பிக்கையினாலும், மது அருந்த அழைப்பது போல் அழைத்துச் சென்று நண்பனையே பலிகொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.


குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பூஜை பொருட்களைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm