
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஈரி (Erie) நகரில் உள்ள தனது வீட்டில் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பிற உறவினர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொன்ற நபர் ஒருவர், பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தார்.
தெருவில் இரண்டு பெண்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்; ஏனைய பாதிக்கப்பட்டவர்கள் வீடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பென்சில்வேனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




