மண்டைதீவு புதைகுழி விவகாரம்: இராணுவ வாக்குமூலம் பெறத் தாமதம் - விசாரணைகளைத் துரிதப்படுத்தக் கோரிக்கை!

மண்டைதீவு புதைகுழி விவகாரம்: இராணுவ வாக்குமூலம் பெறத் தாமதம் - விசாரணைகளைத் துரிதப்படுத்தக் கோரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
1990களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (10) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தம்மிடமிருந்த சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
எனினும், சம்பவம் இடம்பெற்றதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் இருந்தமைக்கான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்போது அங்கு கடமையிலிருந்த இராணுவ அதிகாரிகளின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியிருந்த அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




