பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் சமூக உரையாடல்: மக்களுக்குச் செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க ஐ.நா அழைப்பு!

பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் சமூக உரையாடல்: மக்களுக்குச் செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க ஐ.நா அழைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் அமைதியைப் பேணவும் நெருக்கடிகளைத் தடுக்கவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'சமூக உரையாடல்' திட்டத்தின் ஊடாக, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களில் பங்களிப்பதற்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவிலேயே அரச துறை உரையாடலுக்கான முதலாவது தேசியக் கட்டமைப்பு நிறுவப்பட்டு, அரச சேவையில் சமூக உரையாடல் தொடர்பான பிரகடனமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கூட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார மீள் எழுச்சிச் செயற்பாடுகளின் போது அதிகரித்த வரிகள், பொருட்களின் விலையேற்றம், கொள்வனவு சக்தி வீழ்ச்சி மற்றும் தொடரும் வறுமை ஆகியவற்றால் குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் இன்னமும் நீடிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
- பிரச்சினைகளுக்கு உரையாடல் மூலம் தீர்வு காணுதல் மற்றும் மோதல்கள் தீவிரமடைவதைத் தடுத்தல்.
- அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீள் எழுச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கம், தொழில் வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்தினரை ஒன்றிணைத்தல்.
- சிறந்த அரச சேவை, பணியிடங்களில் நியாயமான சூழல் மற்றும் மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்புகளை உறுதி செய்தல்.
பிரச்சினைகள் தீவிரமடைந்து சமூகப் பிளவுகளாக மாறுவதற்கு முன்னரே அவற்றைக் களைய மக்களை ஒன்றிணைத்து உரையாடலை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதே உண்மையான பொறுப்பு எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




