பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு: கல்வியியல் பட்டதாரிகளை நியமிக்க புதிய நடவடிக்கை!

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு: கல்வியியல் பட்டதாரிகளை நியமிக்க புதிய நடவடிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் விரைவாக இணைத்துக்கொள்வதற்காக ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் புதிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு, இந்த விசேட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கல்வியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் நேரடியாகவும் விரைவாகவும் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பிலான இறுதி வரைபு தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




