சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
ஆரோக்கியம்

"பிரசவத்திற்குப் பிந்தைய தொப்பையைக் குறைக்க சில எளிய இயற்கை வழிமுறைகள்!"

VIGNESWARAN ABIRAMY•18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"பிரசவத்திற்குப் பிந்தைய தொப்பையைக் குறைக்க சில எளிய இயற்கை வழிமுறைகள்!"

"பிரசவத்திற்குப் பிந்தைய தொப்பையைக் குறைக்க சில எளிய இயற்கை வழிமுறைகள்!" குறித்த பிரத்யேக ஒளிப்படம்

குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் தாய்மார்களுக்கு ஏற்படும் வயிற்றுப் பகுதிப் பருமன் அல்லது தொப்பையானது பலரின் கவலையாக இருக்கின்றது. இதற்காகக் கடுமையான உடற்பயிற்சிகளையோ அல்லது பட்டினி கிடக்கும் முறைகளையோ பின்பற்றுவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இயற்கை வழிகளைப் பின்பற்றுவதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது .

தாய்மார்கள் பின்பற்றக்கூடிய சில முக்கிய இயற்கை வழிமுறைகள் இதோ:

தாய்ப்பாலூட்டுதலின் பலன்கள்: 

குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது தாயின் உடலில் உள்ள மேலதிக கலோரிகளை இயற்கையாகவே எரிப்பதுடன், கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்பப் பெரிதும் உதவுகிறது.

சீரகம் மற்றும் ஓமம் நீர்:

அன்றாடக் குடிநீரில் சீரகம் அல்லது ஓமத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.

வெதுவெதுப்பான நீர் அருந்துதல்: 

நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரைப் பருகுவது உடலின் நச்சுகளை வெளியேற்றி, வளர்சிதை மாற்றத்தை (Metabolism) துரிதப்படுத்துகிறது.

உணவு முறை மாற்றங்கள்:

வெள்ளைச் சர்க்கரை மற்றும் மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மென்மையயான நடைப்பயிற்சி: 

பிரசவத்திற்குப் பிந்தைய குறிப்பிட்ட ஓய்வுக் காலத்தின் பின்னர், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மென்மையான நடைப்பயிற்சி மற்றும் எளிய சுவாசப் பயிற்சிகளை படிப்படியாகத் தொடங்கலாம்.

உடனடி மாற்றங்களை எதிர்பாராமல், முறையான உணவுப் பழக்கம் மற்றும் நிதானமான வழிமுறைகள் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும்.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சளி, காய்ச்சலிலிருந்து தற்காக்க: மழைக்கால ஆரோக்கியக் குறிப்புகள்!

மழை மற்றும் குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகள், சளி மற்றும் காய்ச்சலிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் எளிய, பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறிப்புகள்:

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெற்றியில் கருமை, வெள்ளைத் திட்டுகளா? ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜிக்கு எளிய பராமரிப்பு குறிப்புகள்!

இன்று பலரும் எளிதாகப் பயன்படுத்தும் ஸ்டிக்கர் பொட்டுகளில் உள்ள பசை மற்றும் ரசாயனங்களால் சிலருக்கு நெற்றியில் அரிப்பு, சிவப்பு நிறம், கருமை அல்லது வெள்ளைத் திட்டுகள் போன்ற சரும அலர்ஜி ஏற்படலாம். இதற்கான முக்கியக் குறிப்புகள் இதோ

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

குறைந்த எண்ணெயில் நிறைந்த சத்து; சுவையான கோதுமை ரவை காய்கறிப் பணியாரம்!

குளிர்காலத்திற்கும், மாலை நேரச் சிற்றுண்டிக்கும் ஏற்ற சத்தான கோதுமை ரவை வெஜ் பணியாரம் மிக எளிதாகவும், குறைந்த எண்ணெயிலும் செய்யக்கூடிய அருமையான உணவாகும்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உடலுக்குக் குளிர்ச்சி தரும் வாழைத்தண்டு பொரியல்: சுலபமான செய்முறை!

உடலுக்குக் குளிர்ச்சியும் பல ஆரோக்கிய நன்மைகளும் தரும் வாழைத்தண்டு பொரியலை மிகச் சுவையாகவும், எளிமையாகவும் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm