சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

மத்திய கிழக்கு பதற்றத்தைத் தணிக்க இலங்கை கோரிக்கை: ஈரானிய அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

VIGNESWARAN ABIRAMY•29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மத்திய கிழக்கு பதற்றத்தைத் தணிக்க இலங்கை கோரிக்கை: ஈரானிய அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

மத்திய கிழக்கு பதற்றத்தைத் தணிக்க இலங்கை கோரிக்கை: ஈரானிய அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளில் அமைதியான தீர்வை எட்டுமாறு இலங்கை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத்தொடரின் (UNGA81) உயர்மட்டச் சந்திப்பின் இடையே, இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி செய்யத் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, பிராந்தியத்தில் விரைவாக ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு வலியுறுத்திய அமைச்சர் விஜித ஹேரத், அமைதிக்கான இராஜதந்திர முயற்சிகளுக்கு இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், இக்கூட்டத்தொடரின் இடையே நேபாள வெளிவிவகார அமைச்சருடனும் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm