சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி!

VIGNESWARAN ABIRAMY•6 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி!

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இஸ்லாமாபாத் கழக கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போஷகர் பதினொருவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை 142 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இப் போட்டியில் 254 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை போஷகர் பதினொருவர் அணியை 111 ஓட்டங்களுக்கு சுருட்டி இலங்கை வெற்றிபெற்றது.

கேஷர நுவன்த 4 விக்கெட் குவியலையும் ஏஷான் மாலிங்க 3 விக்கெட் குவியலையும் பதிவுசெய்து வெற்றியை இலகுவாக்கினர். கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் இலங்கை முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. இந்தப் போட்டியில் இந்த எண்ணிக்கையே அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக பதிவானது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm