சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை வருவாய் 15.5 சதவீதம் சரிவு!

சுமி•31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு2
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை வருவாய் 15.5 சதவீதம் சரிவு!

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை வருவாய் 15.5 சதவீதம் சரிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் எனப்படும் IT/BPO சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 15.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் 621 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வருவாய், இந்த ஆண்டு 524.9 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த வருவாய் 7.2 சதவீதம் சரிந்து 65 மில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த சேவை ஏற்றுமதி வருவாய் 11.2 சதவீதம் அதிகரித்து 559.5 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. கடல் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் மூலம் கிடைத்த வருவாயும் 46.3 சதவீதம் அதிகரித்து 199 மில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.

இருப்பினும், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் சேவைகள் கணக்கின் உபரி 22.3 சதவீதம் குறைந்து 2.21 பில்லியன் டொலராகச் சரிவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm