2027 முதல் 2029 வரை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகச் சரியும் எனக் கணிப்பு.

2027 முதல் 2029 வரை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகச் சரியும் எனக் கணிப்பு. குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக 5 சதவீத அளவில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து பேணிச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, இந்த ஆண்டின் வளர்ச்சி வேகம் 3 முதல் 4 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகக் காணப்படுவதுடன், எதிர்வரும் 2027, 2028 மற்றும் 2029 ஆகிய ஆண்டுகளில் அது 3 சதவீதமாகக் குறையும் எனப் புள்ளிவிபரங்கள் ஊடாகத் தெளிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரலாற்றில் 1978ஆம் ஆண்டும், யுத்தம் நிறைவடைந்த 2010 - 11 காலப்பகுதியிலும் மட்டுமே 8 சதவீத வளர்ச்சி வேகத்தை இலங்கை எட்டியிருந்தது. தற்போதைய நிலையில் முதலீடுகளை அதிகரித்தாலும் அதற்கேற்ற பொருளாதார வேகம் கிடைக்காமல் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்துள்ளதாகப் பேராசிரியர் விளக்கமளித்தார்.
மேலும், 1960ஆம் ஆண்டில் தென்கொரியா மற்றும் இலங்கையின் தனிநபர் வருமானம் முறையே 156 மற்றும் 146 டொலர்களாகக் காணப்பட்ட போதிலும், இன்று தென்கொரியாவின் தனிநபர் வருமானம் 36,200 டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும், இலங்கையின் தனிநபர் வருமானம் 5,002 டொலர்களாகவே உள்ளதாகவும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




