இலங்கையில் வேலையின்மை விகிதம் 4% ஆக அதிகரிப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிக்கை!

இலங்கையில் வேலையின்மை விகிதம் 4% ஆக அதிகரிப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதமும், நடப்பு ஆண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதமும் அதிகரிப்பாகும். இதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பின்றி உள்ள நபர்களின் எண்ணிக்கை 3,40,240 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆண்களின் வேலையின்மை 2.8 சதவீதமாகவும், பெண்களின் வேலையின்மை 6.1 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையேயே அதிகளவில் வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது. அதேவேளையில், நாட்டின் தொழிலாளர் படை (Labor Force) கடந்த ஆண்டின் 49.3 சதவீதத்தில் இருந்து நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் படகுடன் 7 பேர் கைது
இலங்கை கடற்படையினால்,தேவேந்திரமுனைக்கு தெற்கே அமைந்துள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கொடியற்ற வெளிநாட்டுப் படகொன்றுடன் ஏழு வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.



