பொதுமக்களின் அமைதியைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை: ஒலி உபகரணங்கள் தொடர்பில் பொலிஸாரின் புதிய உத்தரவு!

பொதுமக்களின் அமைதியைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை: ஒலி உபகரணங்கள் தொடர்பில் பொலிஸாரின் புதிய உத்தரவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்:
சட்டப்படியான குற்ற நடவடிக்கை: உயர்நீதிமன்ற வழக்கு (இலக்கம் 38/2005) உத்தரவின்படி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆவது பிரிவின் கீழ் 'பொதுத் தொல்லையாகக்' கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
அனுமதி பெறப்பட்ட நாட்களுக்கான நேர வரையறை:
திங்கள் முதல் வியாழன் வரை: இரவு 10:00 மணி வரை
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்: அதிகாலை 01:00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமைகளில்: அதிகாலை 12:30 மணி வரை
சிறப்பு மத நிகழ்வுகள் மற்றும் முக்கிய விழாக்களுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் சிறப்பு அனுமதி வழங்கப்படும். எனினும், அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலியானது சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மட்டுமே கேட்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.எனவும்
அதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேரடியாகச் சென்று சோதனையிடுவார்கள் என்றும், எச்சரிக்கையையும் மீறி அதிக ஒலியுடன் இயங்கினால் ஒலி உபகரணங்கள் உடனடியாகப் பொறுப்பேற்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிக ஒலி எழுப்பப்படுவது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆகாஷ்
முதன்மை ஆசிரியர்அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




