பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு எட்டப்படாவிட்டால், புத்தாண்டிற்குப் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
Fox News தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் அர்த்தமற்ற முறையில் பேசிக்கொண்டே இருப்பதாக அவர் அதிருப்தி வெளியிட்டார்.
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பஹ்ரைனிலுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை மீறும் ஈரானியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மூழ்கடிக்கப்படும் என ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரானில் இடம்பெறும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடருமாறு அந்நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




