கதாநாயகனாக சூரி நடிக்கும் 7-வது திரைப்படம்; 'சூரி 07' படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு!

கதாநாயகனாக சூரி நடிக்கும் 7-வது திரைப்படம்; 'சூரி 07' படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
'விடுதலை', 'கருடன்' உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கதாநாயகனாகத் தொடர்ந்து கலக்கி வரும் நடிகர் சூரி, அடுத்ததாக 'இன்று நேற்று நாளை', 'அயலான்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
கதாநாயகனாக சூரி நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது என்பதால், இதற்குத் தற்காலிகமாக 'சூரி 07' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றிருந்த 'BLOOD FOLLOWED THE FLOOD' என்ற வாசகம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், எமோஷனல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் 'சூரி 07' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




