வாரத்திற்கு 35 மணி நேர வேலைத் திட்டத்திற்கான முன்னோடி முயற்சியைத் தொடங்குகிறது சுவிஸ் மாநகரம்!
வாரத்திற்கு 35 மணி நேர வேலைத் திட்டத்திற்கான முன்னோடி முயற்சியைத் தொடங்குகிறது சுவிஸ் மாநகரம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச், ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைக்கும் நோக்கில் 35 மணி நேர வாராந்திர வேலைத் திட்டத்திற்கான முன்னோடி முயற்சியைத் தொடங்கவுள்ளது.
சூரிச் நகர அரசு, தேர்வுசெய்யப்பட்ட ஊழியர்களுக்கு வாராந்திர வேலை நேரத்தை தற்போதைய 42 மணி நேரத்திலிருந்து 35 மணி நேரமாகக் குறைக்கும் ஒரு வருட முன்னோடித் திட்டத்திற்கான சட்டக் கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மாதச் சம்பளத்தில் எந்தவிதக் குறைப்பும் இன்றி செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தில் , காவலர் Police) பொதுப் போக்குவரத்துப் பணியாளர்கள் (Public Transport Staff) சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் (Carers) போன்ற 24 மணி நேர சுழற்சி முறையில் பணியாற்றும் ஊழியர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
பணியாளர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, பணிச் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாக்கக் கொண்ட இத்திட்டம், நகராட்சிப் பணிகளின் திறனைப் பாதிக்காமல் எவ்வாறு செயல்படுகிறது என்பது ஒரு வருட காலத்திற்கு தீவிரமாகக் கண்காணிக்கப்படவுள்ளது.
தொழிலாளர்களின் நலன் கருதி இடதுசாரி அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட இந்த முயற்சி, சுவிட்சர்லாந்தின் வழக்கமான வேலை நேரக் கொள்கைகளில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!
சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!
சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




