சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யுடன் டேங்கர் மூழ்கியது: ஈரான் தகவல்.

VIGNESWARAN ABIRAMY•16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யுடன் டேங்கர் மூழ்கியது: ஈரான் தகவல்.

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யுடன் டேங்கர் மூழ்கியது: ஈரான் தகவல். குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்கண்ணி வெடியில் சிக்கி, இரண்டு மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய்யுடன் பாரிய எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் அனுமதிக்கப்படாத பாதை வழியாகப் பயணிக்க முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடற்கண்ணி வெடிகளில் மோதித் தீப்பிடித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இதில், இரண்டு மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்ற பாரிய டேங்கர் கப்பல் பாரசீக வளைகுடாவின் தெற்குப் பகுதியில் மூழ்கியுள்ளதாக அப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கப்பல்கள் தங்களது வழிசெலுத்தல் கருவிகளை அணைத்துவிட்டு ரகசியமாகப் பயணிக்க முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. எவ்வாறாயினும், மூழ்கிய கப்பலின் பெயர் அல்லது அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவத்தால், சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm