
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 10 காவல்துறை அதிகாரிகள் பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் (Khyber Pakhtunkhwa) பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சோதனை மற்றும் ரோந்துப் பணிய முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களின் வாகனங்கள் மீது திடீரெனதாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் உடனடியாக எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் நீடித்த இந்த பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில், 10 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் .
அதேவேளையில், காவல்துறையினரின் அதிரடி எதிர்த்தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த அதிகாரிகளின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்தப் பகுதியில் தப்பியோடிய ஏனைய பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




