
பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
காணாமல் போன நிலையில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன நிலையில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை - மாபாக்கட வௌ பகுதியில் பாறையொன்றுக்கு அருகிலிருந்து இவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி கடமையில் ஈடுபட்டிருந்த பின்னர், குறித்த வைத்தியர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது கார் மீகஹகியுல பகுதி ஊடாக மஹியங்கனை நோக்கிச் சென்றமை CCTV கேமராக்களில் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், மாபாக்கட வௌ 17ஆம் மைல்கல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் அவரது கார் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போதே, கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்ற பொலிஸார், முதற்கட்ட விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரணம் குறித்த உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




