சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

VIGNESWARAN ABIRAMY•10 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பிள்ளையான் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி மற்றும் காத்தான்குடி பகுதிகளில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் மற்றும் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பிள்ளையானைக் காணொளித் தொழில்நுட்பம் மூலம் ஆஜர்படுத்த முடியாது எனச் சிறைச்சாலை அதிகாரிகள் எழுத்து மூலமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிள்ளையான் உட்பட மூன்று பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், தலைமறைவாகி லண்டனில் வசித்து வரும் சந்தேக நபரான மொஹமட் பாய்ஸ் என்பவருக்குத் திறந்த பிடிவிறாந்தையும் தொடர்ந்து பிறப்பித்தார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm