கொழும்புக்கு மீண்டும் வருகை தந்துள்ளது அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் கன்பெரா கப்பல்!

கொழும்புக்கு மீண்டும் வருகை தந்துள்ளது அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் கன்பெரா கப்பல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra - LCS 30) போர்க்கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு மீண்டும் வருகை தந்துள்ளது.
இந்த ஆண்டில் ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.இலங்கை வந்தடைந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் முறைப்படி கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, இலங்கை கடற்படையினருடனான பரஸ்பர உறவை வலுப்படுத்துதல், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை மற்றும் அமெரிக்கக் கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




