சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

உள்ளூர் வர்த்தகங்களுக்கு கைகொடுக்கும் உலக வங்கி; முதன்முறையாக ரூபாயில் கடன் வசதி!

VIGNESWARAN ABIRAMY•26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
உள்ளூர் வர்த்தகங்களுக்கு கைகொடுக்கும் உலக வங்கி; முதன்முறையாக ரூபாயில் கடன் வசதி!

உள்ளூர் வர்த்தகங்களுக்கு கைகொடுக்கும் உலக வங்கி; முதன்முறையாக ரூபாயில் கடன் வசதி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஆசியாவிலேயே முதல் முறையாக, இலங்கையின் வர்த்தக நிறுவனங்களுக்கு நீண்டகால அடிப்படையில் இலங்கை ரூபாயில் கடன் வழங்கும் புதிய நிதி வசதியை உலக வங்கி குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக வங்கி குழுமத்தின் திறைசேரிப் பிரிவின் ஏற்பாட்டில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனமான ஐ.எஃப்.சி (IFC) மற்றும் எச்.எஸ்.பி.சி (HSBC) இலங்கை ஆகியவற்றுக்கு இடையே இதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதியில், ஆறு வருட நிலையான வட்டி விகிதத்தில் இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.

இலங்கை நிறுவனங்கள் எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணய மாற்று விகித அபாயங்களைக் குறைப்பதும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், இலங்கையின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் ஒன்றிற்கு, பத்து மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான பத்து வருட கால இலங்கை ரூபாய் கடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm