
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 58-வது பிறந்தநாள் இன்று! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் 9-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க, தனது 58-வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடுகிறார்.
1968-ஆம் ஆண்டு பிறந்து, அநுராதபுரம் தம்புத்தேகமவில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர், 1995-ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டம் பெற்றார். 2000-ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து, 2004-ஆம் ஆண்டு விவசாய அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2014-இல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரானார். பின்னர் தேசிய மக்கள் சக்தியை உருவாக்கி, 2024 செப்டம்பர் 21-ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு வரலாறு படைத்தார். பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதிக்குப் பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




