2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் சந்தர்ப்பம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் சந்தர்ப்பம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2026-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 8-ஆம் திகதி முதல் 17-ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடங்கள், பரீட்சை மொழி மூலம் மற்றும் முகவரி உள்ளிட்ட விபரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அவற்றை onlineexams.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக நிகழ்நிலையில் திருத்திக்கொள்ள முடியும்.
இன்று நவம்பர் 19-ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள இத் திருத்தப் பணிகளை எதிர்வரும் நவம்பர் 30-ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் இத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு பரீட்சார்த்திக்கு ஒரு தடவை மாத்திரமே அனுமதிப்பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதால், விபரங்களை மிக அவதானமாகச் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




