சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

மும்பையில் ஊர்வலத்தின் போது 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து சோகம் – இருவர் பரிதாப பலி, 5 பேர் படுகாயம்!

கயல்•23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மும்பையில் ஊர்வலத்தின் போது 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து சோகம் – இருவர் பரிதாப பலி, 5 பேர் படுகாயம்!

மும்பையில் ஊர்வலத்தின் போது 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து சோகம் – இருவர் பரிதாப பலி, 5 பேர் படுகாயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பிரம்மாண்டமாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 22 அடி உயர விநாயகர் சிலை திடீரென சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பிரம்மாண்டமாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 22 அடி உயர விநாயகர் சிலை திடீரென சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில், Bhuleshwaracha Raja விநாயகர் சிலையை வரவேற்பதற்கான ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.


'லால்பாக்' பகுதியிலிருந்து பந்தலை நோக்கி 22 அடி உயர விநாயகர் சிலையை டிராலியில் வைத்து நகர்த்தி வந்தபோது, சிலையின் சட்டகத்தில் இருந்த வெல்டிங் உடைந்ததால், சிலை சட்டென்று சமநிலை இழந்து அங்கிருந்த பக்தர்கள் மீது சரிந்து விழுந்தது.


இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், கணபதி மண்டலத் தலைவர் சங்கேத் நெவ்சே (33) மற்றும் பிரிஜேஷ் ஜோஷி (30) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.


காயமடைந்த ஐந்து பேரில் 5 மற்றும் 7 வயதுடைய இரு சிறுமிகளும் அடங்குவர். அவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரது நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மும்பை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், சிலை தாங்கிய அமைப்பில் ஏற்பட்ட கோளாறு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
கயல்

கயல்

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm