
கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதி தேவேந்திரமுனையைச் சேர்ந்த இருவர் பலி குறித்த பிரத்யேக ஒளிப்படம்
திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இந்த மூன்று நபர்களும் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்கள் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர், தற்போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




