
தென்னாப்பிரிக்காவில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 17 பேர் பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே உள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் பகுதியில், நேற்று இரவு துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த வாகனம் ஒன்றிலிருந்து எட்டு ஆண்களின் சடலங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களின் பின்னர், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஜெஃப்ஸ்வில்லி குடியிருப்புப் பகுதியிலுள்ள குடிசை ஒன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர்.
சுமார் 530 கிலோமீற்றர் இடைவெளியில் இடம்பெற்ற இந்த இரண்டு கொலைச் சம்பவங்களுக்குமான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்நாட்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட தென்னாப்பிரிக்க பொலிஸ் ஆணையாளர், "தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் அண்மைக்காலமாக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




