ஐ.நா. சபையில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களிக்க பிரித்தானியா தீர்மானம்!

ஐ.நா. சபையில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களிக்க பிரித்தானியா தீர்மானம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கிரிமியா உள்ளிட்ட உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் குழுவில் உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஆர்ச்சி யங் (Archie Young), கிரிமியா என்பது உக்ரைனின் ஒரு பகுதியே எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பலவந்தமாக எல்லைகளை மாற்றுவதையும் ஆக்கிரமிப்புகளை இயல்பாக்குவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ஆக்கிரமிப்புச் சக்தி என்ற ரீதியில் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ரஷ்யாவே பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சுயாதீன மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் செல்வதற்கு ரஷ்யா அனுமதி வழங்க வேண்டும் எனவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் பலவந்தமாக இடமாற்றம் செய்யப்பட்ட பொதுமக்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் குறித்த தீர்மானம், 77 ஆதரவு வாக்குகளுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




