பாதாள உலகக் குழு உறுப்பினர் 'ரொன் மல்லி' பல்கேரியாவில் கைது: நாட்டிற்கு அழைத்துவர அதிரடி நடவடிக்கை!

பாதாள உலகக் குழு உறுப்பினர் 'ரொன் மல்லி' பல்கேரியாவில் கைது: நாட்டிற்கு அழைத்துவர அதிரடி நடவடிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான சரித் சந்தகலூம், என்ற 'ரொன் மல்லி' பல்கேரியாவில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் 'ரெட் நோட்டீஸ்' சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட 'ரொன் மல்லி'யை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, குற்றப்புலனாய்வுத் துறையினர் (CID) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் இவர், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான 'ஹரக் கடா'வின் (Harak Kata) நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




