பெண்களின் சுகாதாரப் பொருட்களுக்கு வரிவிலக்கு கோரி பண்டாரவளையில் தீவிர கவனயீர்ப்பு பிரசாரம்!

பெண்களின் சுகாதாரப் பொருட்களுக்கு வரிவிலக்கு கோரி பண்டாரவளையில் தீவிர கவனயீர்ப்பு பிரசாரம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பெண்களின் சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிக வரிகளை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, விடுதலைக்கான பெண்கள் இயக்கத்தினால் புதன்கிழமை (28) பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக விழிப்புணர்வுப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்களின் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவற்றின் மீதான அதிக வரிச்சுமையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




