
முதலமைச்சராக விஜய்... தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்! நடிகர் யாஷ் புகழாரம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
முதலமைச்சராக விஜய் கிடைத்ததற்கு தமிழக மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்! கே.ஜி.எஃப் நாயகன் நடிகர் யாஷ் சென்னையில் பேசிய இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!
முதலமைச்சராக விஜய் கிடைத்ததற்கு தமிழக மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்! கே.ஜி.எஃப் நாயகன் நடிகர் யாஷ் சென்னையில் பேசிய இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னடப் திரையுலகின் முன்னணி நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யாஷ், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்தார்.
தமிழக மக்கள் விஜய் மீது வைத்திருக்கும் அன்பை இந்தத் தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியைப் பார்க்கும்போது நமக்கே வியப்பாக இருக்கிறது. காலை முதல் இரவு வரை மக்களுக்காக அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார். விஜய் போன்ற ஒரு தலைவர் முதலமைச்சராகக் கிடைக்கத் தமிழக மக்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள், மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று யாஷ் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "விஜய்யின் இந்த அரசியல் வருகையும் உழைப்பும் ஒரு புதிய மாற்றத்தையும் புதிய அரசியலையும் தோற்றுவித்துள்ளது. மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செவ்வனே செய்து வருகிறார். இந்த வெளிப்படையான தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அவருக்குப் மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள், அதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உள்ளது" என்றும் பாராட்டிப் பேசினார்.
பான்-இந்திய நட்சத்திரமான நடிகர் யாஷ், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைப் பற்றிப் பேசிய இந்த நெகிழ்ச்சியான பேச்சு தற்போது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




