
எச்சரிக்கை: வங்கி பணத்தை குறிவைக்கும் புதிய மோசடி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் SLCERT வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்டு, அவர்களின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் விசாரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வைப்புத் தொகைகள் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் இருப்பதாக கூறும் மோசடிக்காரர்கள், அந்தப் பணம் மோசடியான முறையில் சம்பாதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், அது தொடர்பாக நிதிக்கு குற்றப் புலனாய்வப் பிரிவு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி அவர்களை அச்சுறுத்துகின்றனர்.
பின்னர், போலியான இலங்கை மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் பயன்படுத்தப்பட்ட கடிதங்களை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களை மேலும் அச்சுறுத்துகின்றனர். இலங்கைவரலாறு
அதன் பின்னர், குறிப்பிட்ட மற்றொரு தனியார் வங்கிக் கணக்குக்கு தங்களைப் பணத்தை மாற்றமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதுடன், அதற்காக ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணும் வழங்கப்படுகிறது. அந்தக் கணக்குக்கு நிதிக்கு குற்றப் புலனாய்வப் பிரிவின் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானது என மோசடிக்காரர்கள் கூறுகின்றனர்.
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




