சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

VIGNESWARAN ABIRAMY•29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மீனவர்களுக்கு எச்சரிக்கை! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

மீனவர்களுக்கு எச்சரிக்கை! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதன் காரணமாக ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்றும், கொந்தளிப்பான கடல் சூழலும் நிலவக்கூடும் என்பதால், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ச்சியாகக் கவனிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm