
உலக நீரிழிவு தினம்: தாமரை கோபுரம் நீல நிற ஒளியில் ஒளிரச் செய்யப்பட்டது. குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொழும்பு தாமரை கோபுரம் நீல நிற ஒளியால் ஒளிரச் செய்யப்பட்டது.
இலங்கை நீரிழிவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விசேட நிகழ்வு, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில் இடம்பெற்றது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் உலகளாவிய விழிப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, உலகின் பிரசித்தி பெற்ற சின்னங்களுடன் இலங்கையின் தாமரை கோபுரமும் இணைந்துகொண்டது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் தெளிவான அறிகுறிகள் தென்படுவதில்லை என்பதால், பொதுமக்கள் முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், நோயைக் கட்டுப்படுத்தத் தவறினால் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும் என எச்சரித்த அவர், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சி மூலம் நீரிழிவு அபாயத்தைக் குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




