மூட்டு வலி வராது... இதயமும் பலமாகும்! 50-க்கு மேல் செய்ய வேண்டிய 'ஸ்மார்ட்' நடைப்பயிற்சி!
50 வயதைத் தொட்ட உடனேயே பலருக்கும் வரும் மிகப்பெரிய கவலை - "உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஓட வேண்டுமா? ஓடினால் மூட்டு வலி அதிகமாக்குமே!" என்பதுதான். ஆனால், இனி அந்த கவலையே தேவையில்லை. மூட்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் தராமல், இதயத்தை பலப்படுத்த ஒரு மிகச்சிறந்த பயிற்சி இருக்கிறது. அதுதான் ‘மண்டல நடைப்பயிற்சி’ அல்லது சீரான வேக நடைப்பயிற்சி!












