மண்சரிவு அபாயம்: பல மாவட்டங்களுக்கு NBRO எச்சரிக்கை!
தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை பலவந்தமாக நீக்கப்பட்டமை தொடர்பில் நாட்டின் பிரதான மகாநாயக்க தேரர்கள் கடும் கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக 211,666 புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ச, சிரில்லியா சவியா' நிதியம் தொடர்பான நிதி முறைகேடுகள் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
ஏ-32 பூநகரி - யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள முக்கிய இணைப்புப் பாலமான சங்குப்பிட்டி பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அடுத்த 5 நாட்களுக்குப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.