மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் CT சிமுலேட்டர் பழுது: 1,500 நோயாளர்கள் பாதிப்பு!
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட CT சிமுலேட்டர் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கதிர்வீச்சு சிகிச்சையைப் பெற வேண்டிய சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.












